விடாமல் விரட்டும் மாரடைப்பு - குஜராத்தில் ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு.!
five peoples died for heart attack in gujarat
விடாமல் விரட்டும் மாரடைப்பு - குஜராத்தில் ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு.!
நாட்டில் கொரோனா தொற்றுக்குப் பிறகு மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அச்சத்திலேயே உள்ளனர்.
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் குஜராத் மாநிலத்தில் 5 இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் அருகே கோகடல் நகரில் வசிக்கும் 32 வயது உடைய இளைஞர் ரஷித் கான் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனே அவரது குடும்பத்தினர் ரஷித்தை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரஷித் மாரடைப்பால் இறந்ததாக தெரிவித்தனர். இதேபோல், தாரா பர்மர் என்ற 21 வயதுடைய இளைஞர் அவரது இல்லத்தில் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.
மேலும், தொழிற்சாலையில் சமையல்காரராகப் பணியாற்றி வந்த விஜய் சங்கேத், கோத்தாரியா நகரில் வசித்து வந்த ராஜேஷ் பட், ராஜ்கோட்டில் அடுக்குமாடிக் குடியிருப்பில் காவலாளியாக பணிபுரிந்து வந்த நேபாளத்தை சேர்ந்த லலித் பரிஹார், உள்ளிட்டோர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த கான் என்ற இளம் கூலித்தொழிலாளி மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாவது, மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறைகளால் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுவே திடீர் மாரடைப்புக்குக் காரணம் என்றுத் தெரிவித்துள்ளனர்.
English Summary
five peoples died for heart attack in gujarat