ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் - அதிகாரி உள்பட ஐந்து பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் - அதிகாரி உள்பட ஐந்து பேர் உயிரிழப்பு.!

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரஜோரி செக்டார் கண்டி வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவ அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி, கடந்த புதன்கிழமை கூட்டு ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது. 

இந்த தேடுதல் வேட்டையின் போது, ஒரு குகையில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இந்த வெடிவிபத்தில் ஒரு அதிகாரி மற்றும் நான்கு வீரர்கள் படுகாயமடைந்தனர். இவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் மூன்று பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

இது தொடர்பாகப் பேசிய ஜம்முவைச் சேர்ந்த பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்ததாவது:- “ரஜோரியில் நடைபெற்று வரும் நடவடிக்கையின் போது ஐந்து வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 

ஒரு முக்கிய அதிகாரி காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும் ராணுவ கமாண்டோக்களும், துணை ராணுவப் படையினரும், ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீஸாரும் தீவிரவாதிகளை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதி பூஞ்ச் பகுதியில் ராணுவ டிரக் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples died for terrorist attack in jammu and kashmeer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->