ஜம்மு காஷ்மீர்! கையெறி குண்டுகளை வீசிய 5 பயங்கரவாதிகள் கைது.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் மதுக்கடையில் கையெறி குண்டுகளை வீசிய 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுக்கடையில் கடந்த 17ஆம் தேதி சிலர் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 4 பேர் காயம் அடைந்து உள்ளனர். இவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த விசாரணையில் குண்டு வெடிக்கப்பட்ட இடத்தின் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து ஐந்து பயங்கரவாதிகளை கைது செய்துள்ளனர். இதில் நான்கு பேர் லஷ்கர் இ-தொய்பா இயக்கத்தை சார்ந்தவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Five persons arrested for bombing liquor store in Jammu Kashmir


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->