டெல்லி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம் - நடந்தது என்ன?
flight emergency landing in rajasthan jothpur airport
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து டெல்லி நோக்கி ஏர்இந்தியா விமானம் நேற்று காலை 9.57 மணி அளவில் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது எரிபொருள் பற்றாக்குறையாக இருந்துள்ளது.
இதையறிந்த விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அருகே உள்ள ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க அனுமதி கோரினார். இதற்கு அனுமதி கிடைத்த நிலையில் அந்த விமானம் காலை 11.50 மணி அளவில் ஜோத்பூர் விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறங்கியது.

இதையடுத்து விமானத்தின் உள்ளே இருந்த பயணிகள் டெல்லி வந்து விட்டதாக கருதி வெளியேற முயன்றனர். ஆனால் ஜோத்பூர் விமான நிலையம் என்று அறிந்தவுடன் இதுபற்றி விமான ஊழியர்களிடம் காரணத்தை கேட்டனர்.
அப்போது தான் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக ஜோத்பூர் விமான நிலையத்தில் விமானம் தரை இறக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
English Summary
flight emergency landing in rajasthan jothpur airport