விடிய விடிய பெய்த மழை - சென்னையில் விமான சேவை பாதிப்பு.!
flight service affected in chennai for heavy rain
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்த நிலையில், சென்னையில் பெய்த கனமழையால் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 35 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது, பெங்களூரு, மும்பை, விஜயவாடா, புவனேஸ்வர், கோழிக்கோடு, திருச்சியில் இருந்து சென்னை வந்த 12 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானத்தில் வட்டமடித்த படி இருந்தன.
இதேபோல், சென்னையில் இருந்து மும்பை, டெல்லி, ஐதராபாத், கொச்சி, கோவை, கொல்கத்தா, இந்தூர் செல்லும் உள்நாட்டு விமானங்களும், சென்னையில் இருந்து சிங்கப்பூர், அபுதாபி, கோலாலம்பூர் உள்ளிட்ட வெளிநாட்டு விமானங்களும் சுமார் 2 மணி நேரம் தாமதமாக சென்றன.
இதற்கிடையே, கனமழை காரணமாக திருச்சி-சென்னை விமானம் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். பல மணி நேரம் கழித்து மழை நின்ற பிறகு விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
flight service affected in chennai for heavy rain