மேலும் 5 நாட்கள் கன மழை எச்சரிக்கை.! ரூ.1,000 கோடி நிவாரணம்.! மிதக்கும் தெலுங்கானா.!
Floating Teluguna Heavy rain warning for 5 more days
தெலுங்கானா மாநிலத்தில் பருவமழை காரணமாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் 5 நாட்கள் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், அங்குள்ள பல்வேறு கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் மூழ்கிய பொதுமக்களை மாநில அரசு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் படகுகள் மூலம் அவர்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. மேலும் வீடுகளில் வளர்க்கப்பட்ட ஆடு, மாடு, கோழி போன்றவைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அந்த பகுதிகளை தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து மத்திய குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் சென்று இழப்பீடு குறித்து ஆய்வு செய்தனர். இதன் பின்னர், உடனடியாக ரூ.1,000 கோடியை மத்திய அரசு, மாநில அரசுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
English Summary
Floating Teluguna Heavy rain warning for 5 more days