மீன் பிரியாணியில் கிடந்த பல்லியின் வால் - அதிரடி காட்டும் அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியில் உள்ள டெக்கான் எலைட் உணவகத்தில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட மீன் பிரியாணியில் பல்லியின் வால் இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. 

இந்த நிலையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், டெக்கான் எலைட் உணவுகத்திற்கு சென்று பிரியாணியின் மாதிரிகளைச் சேகரித்தனர். அப்போது, இந்த உணவகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உணவை ஆர்டர் செய்த நபர் வலியுறுத்தி உள்ளார். 

மேலும், அவர் பிரியாணி சாப்பிட்ட 8 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு உணவகத்தின் உரிமையாளர் ஒருவர், இது பல்லியின் வால் அல்ல, அது ஒரு வகை மீன் என்று தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், டெக்கான் எலைட் உணவுகத்திற்கு சென்று பிரியாணியின் மாதிரிகளைச் சேகரித்தனர். இதற்கு முன்பாக கடந்த ஆண்டு ஐதராபாத்தில் உள்ள மெரிடியன் உணவகத்தில் இருந்து ஆர்டர் செய்த மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி இருப்பதாக நெட்டிசன் ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

food department officers investigation to Lizards tail in fish biryani


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->