சிறுத்தை புலிகளிடமிருந்து மனிதர்களை காக்க நடவடிக்கை - வனத்துறை எடுத்த அதிரடி முடிவு.!
forest department action against save peoples from leopard
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டம் ஜுன்னாரில் உள்ள மலைப்பாங்கான வனப்பகுதியை சுற்றிலும் 233 கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இதனால், இந்த பகுதிகளில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் படுகாயமடைந்தனர். கடந்த ஆண்டில் மட்டும் 9 பேர் பலியாகினர். இந்த தொடர் சம்பவத்தால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் சிறுத்தைப்புலிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துமாறு வனத்துறையிடம் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் வனத்துறை சார்பில் மனிதர்களை பாதுகாக்க நவீன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:- "சிறப்பு புலி பாதுகாப்பு படையை போலவே சிறப்பு சிறுத்தைப்புலி பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது.

சிறுத்தைப்புலிகளால் அதிகம் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் சுமார் 150 வீடுகளில் சூரிய சக்தி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேலியை சிறுத்தைப்புலிகள் கடக்க முயன்றால், அது உயிருக்கு பயந்து திரும்ப ஓடி விடும்.
மேலும் பல இடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்களில் சிறுத்தைகள் பதிவானால் இந்த அமைப்பு வன அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்யும் அலாரத்தை எழுப்பும். இரவு நேரத்தில் சிறுத்தைப் புலி இருப்பதை கண்டறியக்கூடிய விலங்கு ஊடுருவல் கண்டறிதல் மற்றும் விரட்டும் அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு நவீன கழுத்து பட்டைகளை வினியோகித்துள்ளோம். பொதுவாக, சிறுத்தைப்புலிகள் ஒரு நபரின் கழுத்தை தாக்கும். அப்போது இந்த கழுத்து பட்டைகள் அவர்களின் உயிரை பாதுகாக்கும். கொரோனா காலத்தில் மனித செயல்பாடு குறைந்து சிறுத்தைகள் செழித்து வளர்ந்தன.
மேலும் ஜுன்னாரில் சிறுத்தைப்புலி மீட்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையங்கள் கிராமவாசிகளின் தாக்குதல்களில் காயமடைந்த அல்லது மோதல்களில் சிக்கிய சிறுத்தைப்புலிகளுக்கு பராமரிப்பை வழங்குகிறது" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
forest department action against save peoples from leopard