காங்கிரஸ் கட்சிக்கு விழுந்த பேரிடி! முன்னாள் முதலமைச்சர், மூத்த தலைவர் கட்சியில் இருந்து விலகல்!
Former AP chief minister kiran kumar reddy quits from Indian national congress
ஒருங்கிணைந்த ஆந்திராவின் இறுதி முதலமைச்சராக இருந்த கிரன்குமார் ரெட்டி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
ஆந்திர பிரதேசம் தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களும் ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசமாக இருந்த பொழுது முதலமைச்சராக இருந்தவர் கிரண் குமார் ரெட்டி. கடந்த 2009 ஆம் ஆண்டு ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி முதலமைச்சர் ஆக பதவி ஏற்ற சில மாதங்களிலேயே விமான விபத்தில் மறைந்தார். இதனையடுத்து அடுத்த ஒன்றரை வருடங்களுக்கு தமிழகத்தின் முன்னாள் கவர்னராக இருந்த ரோசையா முதலமைச்சராக இருந்தார். பின்னர் அவரும் ஆளுநராக மாற்றப்பட்டதால், கிரண் குமார் ரெட்டி என்பவர் மிஞ்சிய மூன்று வருடங்களுக்கு முதலமைச்சர் ஆக ஆந்திர மாநிலத்தில் பணியாற்றினார்.
அதன் பிறகு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு ஆந்திர பிரதேசம், தெலுங்கானா என இரண்டாக மாநிலம் பிரிக்கப்பட்டது. அத்தோடு கடந்த 9 வருடங்களாக ஆந்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போய்விட்டது. மாநிலம் பிரிந்ததும் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடித்த நிலையில், தற்போது ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்று நினைத்தாரோ என்னவோ, தற்பொழுது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவருக்கு விலகல் கடிதத்தை எழுதியிருக்கிறார்.
English Summary
Former AP chief minister kiran kumar reddy quits from Indian national congress