மேற்குவங்க முன்னாள் முதல்வரின் உடல்நிலை கவலைக்கிடம்..!!
Former West Bengal CM health is worrying
மேற்குவங்க முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேப் பட்டாச்சார்ஜீக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மேற்கு வங்கத்தில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2000 முதல் 2011 ஆம் ஆண்டு வரை மேற்கு வந்த முதலமைச்சராக இருந்துள்ளார்.
அவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு கீழ் சுவாச பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருப்பதாக மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிறப்பு மருத்துவ குழு தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்ஜீ உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Former West Bengal CM health is worrying