கனமழையால் கோட்டை சுவர் இடிந்து விபத்து! 7 பேர் உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


அதிகாலை டாடியாவின் ஒரு பகுதியில் பழைய சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்!

மத்தியபிரதேச மாநிலம் டாடியா நகரில் தொடர் மழை காரணமாக 400 ஆண்டுகள் பழமையான ராஜ்கர் கோட்டை சுவர்  இடிந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது. இன்று அதிகாலை 4 மணி அளவில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் அடியில் சிக்கியிருந்த இரண்டு பேர் படு காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அந்த 2 பேரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும், தொடர் கனமழை காரணமாக தான் சுவர் இடிந்து விழுந்ததில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த சம்பவத்தை அறிந்த அம்மாநில முதல்வர் மோகன் யாதவ், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில். இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை நிகழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fort wall collapsed due to heavy rain 7 people died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->