தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலைக்கு முயன்ற நபர் ; விரைந்து காப்பாற்றிய பெண் போலீஸ்! - Seithipunal
Seithipunal


இரயில் வரும் நேரம் பார்த்து, தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலைக்கு முயற்சி செய்த நபரை, அதிர்ஷ்டவசமாக பெண் போலீஸ் ஒருவர் காப்பாற்றினார்.

மேற்கு வங்க மாநிலத்தில், புர்மா மெத்னிபூர் பகுதியில் உள்ள இரயில் நிலைய தண்டவாளத்தின் அருகே இளைஞர் ஒருவர் வந்து நின்று கொண்டிருந்தார். ரயில் வரும் சமயம் பார்த்து திடீரென தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார்.

இதை கவனித்த ரயில்வே போலீஸ் சுமதி தண்டவாளத்தில் படித்திருந்த அந்த நபரை, தூக்கி தூரமாக வீசினார். சுமதிக்கு அங்கு இருந்த இரண்டு பயணிகள் உதவி செய்தனர். 

அடுத்த சில நிமிடங்களில் அந்த இடத்தை அதிவிரைவு ரயில் ஒன்று கடந்தது. தக்க சமயத்தில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலைக்கு முயன்ற அந்த நபரை விரைந்து காப்பாற்றிய ரயில்வே போலீஸ் சுமதிக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.மேலும் தற்கொலைக்கு முயற்சி செய்த அந்த இளைஞரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fortunately Women Police secured a traveler who tried for sucide


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->