விஷமாகிய கடலை மிட்டாய் - 45 பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.!
forty five students admitted hospital for food poison in karnataga
கர்நாடகா மாநிலத்தில் உள்ள தும்கூர் பாவகடா கோன்னகுரிகே கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில், மாணவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்க வாரத்தில் ஆறு நாட்களும் முட்டை வழங்கப்படுகிறது. முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப்பழம் அல்லது கடலை மிட்டாய் வழங்கப்படுகிறது.
அதன் படி, நேற்று முன் தினம், மாணவர்களுக்கு கடலைமிட்டாய் வழங்கப்பட்டுள்ளது.
அதை சாப்பிட்ட 45க்கும் மேற்பட்ட மாணவர்கள், வாந்தி, வயிற்று வலியால் அவதிப்பட்டனர். உடனே அவர்களை மீட்ட ஆசிரியர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கல்வித்துறை அதிகாரிகள், மாணவர்களின் உடல் நிலை குறித்து, மருத்துவர்களிடம் தகவல் கேட்டறிந்தனர். பின்னர் இந்த அசம்பாவிதத்துக்கு என்ன காரணம் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
forty five students admitted hospital for food poison in karnataga