#குஜராத் : அல்-கொய்தாவுடன் தொடர்புடைய 4 வங்கதேச பிரஜைகள் கைது...!
Four Bangladeshi nationals with Al Qaeda links held in Gujarat
குஜராத் மாநிலத்தில் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய 4 வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் ஒடாவ் மற்றும் நரோல் பகுதியில் வங்காளதேசத்தை சேர்ந்த 4 பேர் சட்டவிரோதமாக போலி ஐடிகளில் வசிப்பதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் முகமது சோஜிப்மியா, முன்னா காலித் அன்சாரி, அசாருல் இஸ்லாம் அன்சாரி மற்றும் அப்துல் லத்தீப் என நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், கைது செய்யப்பட்டவர்கள் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும், பயங்கரவாத அமைப்பில் சேர நகரத்தில் முஸ்லீம் சமூகத்தை ஊக்குவித்து, நிதி சேகரித்தவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் நான்கு பேரிடம் இருந்து நகல் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு மற்றும் அல்-கொய்தா மீடியா பிரிவால் அச்சிடப்பட்ட ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
English Summary
Four Bangladeshi nationals with Al Qaeda links held in Gujarat