ராமநாதபுரம் || விபத்தில் சிக்கிய பள்ளி மாணவர்கள் - மதுபாட்டில் கிழித்து ஒருவர் பலி.!
school student died for accident in ramanathapuram
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சுற்றுச்சாலையில் உள்ள மதுபான கடைக்கு சென்று மதுபாட்டில்கள் வாங்கியுள்ளனர்.
அதனை ஒரு மாணவன் தனது வயிற்று பகுதியில் செருகி வைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அதன் படி இருவரும் தொருவளூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, மினி சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பின்னால் அமர்ந்திருந்த பள்ளி மாணவன் வயிற்று பகுதியில் வைத்திருந்த மது பாட்டில்கள் நொறுங்கி, வயிற்றை குத்திக்கிழித்தன. இந்த விபத்தில் இரண்டு பேரும் உயிருக்கு போராடிய படி கிடந்துள்ளார்.
இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்து, இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்ததில் ஒரு மாணவன் உயிரிழந்தது தெரிய வந்தது. ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இந்த விபத்துக்கு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவன் மதுபாட்டில் குத்தி உயிரிழந்த சம்பவம் பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
school student died for accident in ramanathapuram