'HIT 3' - படக்குழு வெளியிட்ட நானியின் New posters...!!!
HIT 3 Nani new posters released by film crew
பிரபல நடிகர் நானி,தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை' படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் வசூலை அள்ளியது.இதைத் தொடர்ந்து 'HIT 3 ' படத்தில் நானி நடித்துள்ளார்.

இவருக்கு ஜோடியாக kgf பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இந்த HIT 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்குகிறார்.பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகி இருக்கிறது.
மேலும் இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது . ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள HIT 3 படத்தின் டீசரரை படக்குழு அண்மையில் வெளியிட்டது.'காவலர்' கதாபாத்திரத்தில் நானியை இதில் பார்க்க முடிகிறது.
இந்நிலையில் படத்தின் முதல் பாடலான 'ப்ரேம வெல்லுவா' பாடலை படக்குழு வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்றது. படக்குழு தற்பொழுது புது போஸ்டரை வெளியிட்டுள்ளது.
அதில் நானி வாயில் சுருட்டுடன் மற்றும் கயில் துப்பாகியுடன் மாஸாக இருக்கிறார்.LATEST போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனால் நானி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
English Summary
HIT 3 Nani new posters released by film crew