சுசுகி-டொயோட்டா இணைந்து உருவாக்கிய மின்சார வேன் – டூர் போக இனி இந்த எலக்ட்ரிக் வேன் தான்! 2025ல் இந்தியாவில் அறிமுகம்! - Seithipunal
Seithipunal


மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா இணைந்து தயாரிக்கும் e-Every மின்சார வேன் இந்தியாவில் 2025ல் அறிமுகமாகவுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிமீ வரை பயணிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த வாகனம், வணிக நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதலில் 2023-ல் G7 ஹிரோஷிமா உச்சி மாநாட்டில் முன்மாதிரியாகக் காட்சிப்படுத்தப்பட்ட e-Every, வெளியீட்டு தாமதங்களுக்கு பிறகு, தற்போது அதிகாரப்பூர்வமாக 2025ல் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல், இந்தியாவில் மிகவும் பிரபலமான மாருதி ஆம்னி வாகனத்தை நினைவுபடுத்தும் வகையில் இருக்கும், ஆனால் EV மாடலுக்கு ஏற்ற சார்ஜிங் போர்ட், புதுமையான முன்னணி பம்பர், விசாலமான கேபின் போன்ற மாற்றங்களுடன் வருகிறது.

சுசுகி, டொயோட்டா, டைஹாட்சு கூட்டணி
இந்த மின்சார வேன், மூன்று முக்கிய ஜப்பானிய ஆட்டோ நிறுவனங்களான சுசுகி, டொயோட்டா, டைஹாட்சு ஆகியவை இணைந்து உருவாக்கிய மாடலாகும். இதில்,

  • டொயோட்டா – மின்சார வாகன தொழில்நுட்பத்தில் பங்குபற்றும்

  • சுசுகி & டைஹாட்சு – சிறிய வாகன வடிவமைப்பு, உற்பத்தி செயல்பாடுகளை கவனிக்கும்

இந்த கூட்டணியின் மூலம் மலிவு விலையில், திறமையான மற்றும் நவீன தொழில்நுட்பம் கொண்ட மின்சார வணிக வேன்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Suzuki Toyota joint electric van This is the electric van to go on tour Launched in India in 2025


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->