விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி இவர்கள், கடந்த ஆண்டு டிசம்பர் 30 மற்றும் 31 உள்ளிட்ட தேதிகளில் துபாயில் இருந்து வந்த 3 பெண்கள் உட்பட 4 பயணிகளை இடைமறித்து சோதனை நடத்தினர். 

அதில் அவர்களிடமிருந்து 4.597 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தால், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தியபோது ரூ.10,000 கூலிக்காக துபாயிலிருந்து தங்கத்தை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டு உள்ளார். 

ஆகவே, இந்த சம்பவங்களில் கைது செய்யப்பட்டுள்ளவர்களும் அது போன்று பணத்திற்காக தங்கத்தை கடத்தி வந்திருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four kg gold seized in hydrabad airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->