ஒடிசாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகொலை.! போலீசார் தீவிர விசாரணை...! - Seithipunal
Seithipunal


ஒடிசாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலம் பர்கி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜிக்ஜிகி பகுதியை சேர்ந்தவர் குருதேப் பாக் (55). இவரது மனைவி சிபக்ரி பாக் (48). இவர்களது பிள்ளைகள் சுடாமணி பாக் (15) மற்றும் ஸ்ரபானி பாக் (10). இந்நிலையில் நேற்று இவர்கள் நான்கு பேரும் வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததுள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 4 பேரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில், குருதேப் பாக் குடும்பத்தினருக்கும், உறவினர் ஒருவருக்கும் பல ஆண்டுகளாக வீடு கட்டுவது தொடர்பாக நிலப்பிரச்சனை இருந்துள்ளது. இதனால் நான்கு பேரையும் கடப்பாரை மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நான்கு பேரை கொன்ற உறவினரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Four of one family members murder in odisha


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->