நெட் தேர்வு முறைகேடு - சி.பி.ஐ. அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் கைது..! - Seithipunal
Seithipunal


யுஜிசி-நெட் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படும் விவகாரத்தை சிபிஐ விசாரிக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, சிபிஐ போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

அதன் படி, பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா மாவட்டத்தில் சிபிஐ அதிகாரிகள் குழு ஒன்று நெட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து விசாரணை செய்வதற்காக சென்றது. அப்போது காசியாதீக் என்ற கிராமத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்காக நுழைந்தபோது அங்குள்ள கிராம மக்கள் வாகனத்தில் இருந்த அதிகாரிகளை சரமாரியாக தாக்கினர். இதையடுத்து அங்கிருந்து வெளியேறிய சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கு நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது:- "நெட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் ஒருவரிடமிருந்து செல்போனை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும், இதனால் கோபமடைந்த அந்த நபரின் குடும்பத்தார் அதிகாரிகளை தாக்கியதாகவும் தெரிவித்தனர். 

மேலும், வீடியோ காட்சிகளின் அடிப்படையில் அடையாளம் கண்டுபிடித்து 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கிராம மக்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples arrest attack cbi officers in bihar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->