கரும்பு டிராக்டர் மீது கார் மோதி விபத்து - 4 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் உள்ள பாகல்கோட் பகுதியில் கடந்த சில நாட்களாகவே பனிமூட்டம் அதிகமாக உள்ளது. அதனால், இந்தப் பகுதியில் அடிக்கடி வாகன விபத்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று அதிகாலை 4 மணியளவில் ஒரு விபத்து நடைபெற்றுள்ளது.

அதாவது, பாகல்கோட் மாவட்டம், தும்பரம்மிட்டி கிராஸ் அருகே, ஹூப்ளியின் சோலாப்பூர்- தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு நிரம்பிய டிராக்டர் ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. 

அப்போது, விஜயபுரா மாவட்டம் பாதாமி பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஹொனகனஹள்ளிக்கு காரில் வேகமாக வந்துள்ளனர். மூடுபனியால் ட்ராக்டர் நிற்பது தெரியாமல் வேகமாக வந்த கார், அதன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் டிராக்டர் அடியில் கார் சிக்கிக் கொண்டதனால் காரில் இருந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த பாகல்கோட் மாவட்ட எஸ்.பி அமர்நாத் ரெட்டி மற்றும் பரகி போலீஸார் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். பலமணி நேரம் போராடி அவரது உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

மூடுபனி காரணமாக சாலையில் நிறுத்தியிருந்த கரும்பு லாரி மீது கார் மோதி விபத்திற்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பரகி போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples died for accident in karnataga


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->