வருமானத்தை மீறி சொத்து குவித்த அரசு ஊழியர் - 4 ஆண்டு சிறை தண்டனை.!
four years jail penalty to govt employee in karnataga
கர்நாடகா மாநிலத்தில் உள்ள தட்சிண கன்னடா மாவட்டம் மூடபித்ரி நகரசபையில் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வருபவர் பத்மநாபா. இதற்கு முன்பாக இவர் முல்கி டவுன் பஞ்சாயத்தில் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தகவல் கிடைத்தது.
அதன் படி, போலீசார் கடந்த 2015-ம் ஆண்டு பத்மநாபா மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை மங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை அனைத்தும் முடிவடைந்து நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
அப்போது நீதிபதி தெரிவித்ததாவது, பத்மநாபா மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு நான்கு ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.26½ லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும், அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.
English Summary
four years jail penalty to govt employee in karnataga