கணவர்கள் கண் முன்னே இளம்பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் - ஹரியானாவில் அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


கணவர்கள் கண் முன்னே இளம்பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் - ஹரியானாவில் அதிர்ச்சி.! 

ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமம் ஒன்றில் நள்ளிரவில், முகமூடி அணிந்த நான்கு ஆண்கள், கையில் துப்பாக்கி மற்றும் கத்திகளுடன் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளனர்.

பின்னர் அங்கு வசிக்கும் மூன்று குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் மற்றும் கணவர்களை தனியறையில் கயிற்றால் கட்டிப் போட்டுவிட்டு 3 பெண்களையும் அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

விடியலுக்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்ததும், மூன்று பெண்களையும் கட்டிப்போட்டு விட்டு அங்கிருந்துத் தப்பிச் சென்றுள்ளனர். அப்போது வீட்டிலிருந்த ரொக்கம் மற்றும் வெள்ளி உடமைகளையும் திருடிவிட்டுச் சென்றுள்ளனர். 

இதையடுத்து, பாதிக்கப்பட்ட 3 பெண்களில் ஒருவர், ஊர்த்தலைவரிடம் சென்று நடந்ததைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, காவல்துறைக்கு தகவல் சென்றது. இந்தத் தகவலின் படி போலீஸார், முன்விரோதம் காரணமாக இந்த பாலியல் பலாத்காரங்கள் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four youths harassment to three womans in hariyana


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->