ஹைதராபாத் : விமான நிலையத்தில் 67 லட்சம் மதிப்புள்ள 14 தங்கக்கட்டிகள் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


ஹைதராபாத் : விமான நிலையத்தில் 67 லட்சம் மதிப்புள்ள 14 தங்கக்கட்டிகள் பறிமுதல்.!

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகின்றது. இந்த விமானங்களின் மூலம் பல்வேறு நாடுகளில் இருந்து பயணிகள் வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வரும் பயணிகள் தங்கம், அரியவகை உயிரினங்கள் உள்ளிட்டவற்றை கடத்தி வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று இரவு ரியாத்தில் இருந்து ஹைதராபாத் வந்த விமானத்தில், பயணம் செய்த பயணிகள் அனைவரிடமும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பயணி ஒருவர் வைத்திருந்த பை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. 

இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பையை சோதனை செய்தனர். அதில், எமர்ஜென்சி விளக்கின் பேட்டரிகள் இருந்தது. இதனைப் பார்த்த அதிகாரிகள் சந்தேகமடைந்து அதனை உடைத்துப்பார்த்தனர். அந்த பேட்டரியின் உள்ளே 14 தங்கக்கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இவற்றின் மதிப்பு 67 லட்சம் ஆகும். இதையடுத்து அதிகாரிகள் தங்கத்தை கடத்தி வந்த பயணியை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fourteen Gold nuggets seized in hydrabad airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->