நிரந்தர ஊழியர்களுக்கு தலா 14 ஆயிரம் - திருப்பதி தேவஸ்தான அதிரடி அறிவிப்பு.!
fourteen thousand bonous to tirupati devastanam employees
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில், தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி விவரித்து கூறியுள்ளார்.
அதாவது, தேவஸ்தானத்தில் பணி புரியும் நிரந்தர ஊழியர்களுக்கு தலா 14 ஆயிரம் ரூபாயும், ஒப்பந்த ஊழியர்களுக்கு தலா 6 ஆயிரத்து 850 ரூபாயும் பிரம்மோற்சவ சன்மானமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த பிரம்மோற்சவ சன்மானம் வழங்க சுமார் 20 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், வருகிற 23-ந்தேதி நடைபெறும் சீனிவாச திவ்ய அனுகிரக விசேஷ ஹோமத்தில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள், தலா ஆயிரம் ரூபாய் செலுத்தி நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
fourteen thousand bonous to tirupati devastanam employees