மகாராஷ்டிராவில் சோகம் : எமனாய் வந்த ராட்சத இயந்திரம் - பறிபோன 14 தொழிலாளர்களின் உயிர்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் சோகம் : எமனாய் வந்த ராட்சத இயந்திரம் - பறிபோன 14 தொழிலாளர்களின் உயிர்.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் சாபுர் என்ற இடத்தில் மூன்றாம் கட்ட பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அங்கு இரண்டு தூண்களுக்கு இடையில் கான்கிரீட் தளத்தை தூக்கி வைப்பதற்காக கிர்டர் பயன்படுத்தப்பட்டது. 

அப்போது, அந்த ராட்சத இயந்திரம் திடீரென சரிந்துள்ளது. இதில், பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 14 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், மூன்று பேர் காயம் அடைந்தனர். 

சம்பவ இடத்திற்கு போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். அவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மும்பை- நாக்பூரை இணைக்கும் எக்ஸ்பிரஸ் சாலையாக இந்த சாலை கட்டப்பட்டு வருகிறது. 

இந்த சாலை நாக்பூர், வாசிம், வர்தா, அகமதாபாத், பல்தானா, அவுரங்கபாத், அமாரவதி, ஜல்னா, நாஷிக் மற்றும் தானே உள்ளிட்ட மாவட்டங்களை கடந்து செல்கிறது. மகாராஷ்டிரா மாநில அரசால் இந்த சாலை கட்டப்பட்டு வரும் இந்த சாலைக்கு சம்ருதி மஹாமார்க் என்று பெயரிடப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fourteen workers died for grider machine collapses in maharastra


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->