தலைமை நீதிபதிக்கு வந்த சோதனை - 500 ரூபாய் பணம் கேட்டு மோசடி.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் அரசியல் வாதிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோரின் பேரில் அதிகளவில் மோசடி நடந்து வருகிறது. அந்த வகையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெயரில் மோசடி நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, கைலாஷ் மேக்வால் என்ற நபருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெயர் கொண்ட ஐடியில் இருந்து 500 ரூபாய் பணம் கேட்டு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அந்த குறுஞ்செய்தியின் ஸ்க்ரீன்ஷாட்டை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அந்த புகைப்படத்தில், ” நான்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி. நான் அவசரமாக கொலீஜிய ஆலோசனைக்கு செல்ல டாக்சி புக் செய்ய ரூ.500 பணம் வேண்டும். நான் நீதிமன்றத்தை சென்றதும் உங்களது பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த குறுஞ்செய்தியின் நம்பகத்தன்மையை அதிகரிக்க இதனை எனது ஐபாட்-ல் இருந்து அனுப்புகிறேன் என்று மற்றொரு குறுஞ்செய்தியை அவர் அனுப்பியுள்ளார். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fraud supreme court chief justice Chandrachud name


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->