வரும் 30-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்! திமுக அமைச்சருக்கு அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


கடந்த  2008 திமுக ஆட்சி காலத்தில் வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக அமைச்சா் ஐ.பெரியசாமிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், அவரை நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2008-ஆம் ஆண்டு சென்னை திருவான்மியூரில் ஐபிஎஸ் அதிகாரியான ஜாபா் சேட்டின் மனைவி பா்வீன் உள்ளிட்ட சிலருக்கு  தமிழக அரசு வீட்டுமனைகளை ஒதுக்கீடு செய்தது. 

இந்த வீட்டுமனைகளில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்ததாக, வீட்டு வசதித் துறை அமைச்சராக பதவி வகித்த ஐ.பெரியசாமி, ஜாபா் சேட், அவரது மனைவி பா்வீன் உள்ளிட்ட 7 போ் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினா் வழக்குப்பதிவு (2013) செய்தனா்.

இந்த வழக்கில் சிலரை விடுவித்தும், சிலா் மீதான வழக்கை ரத்து செய்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அமைச்சா் ஐ.பெரியசாமி மீதான வழக்கை மட்டும் ரத்து செய்யவில்லை.

இதனையடுத்து சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சா் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக வரும் 30ம் தேதி, அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Minister I Periyasamy case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->