நிலவின் தென் துருவம் யாருக்கு சொந்தம்.? போட்டி போடும் உலக நாடுகள்.!! சர்வதேச சட்டத்தின் முழு விவரம் இதோ.!!
Full rundown of international law on the moon
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவின் தென்துருவத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திரன் மூன்று விண்கலத்தை கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவிய நிலையில் நேற்று மாலை சரியாக 6:03 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. நிலவில் கால் பதிக்கும் 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றதோடு தென் துருவத்தில் முதன் முதலில் தரையிறங்கிய நாடு என்ற சாதனையையும் படைத்துள்ளது.
இதற்கு முன்பாக ரஷ்யா ஒருங்கிணைந்த சோவியத் யூனியனாக இருந்தபோது முதன்முறையாக கடந்த 1959ம் ஆண்டு லூனா விண்கலம் மூலம் நிலவில் கால் பதித்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா கடந்து 1969ம் ஆண்டு அப்போலோ விண்கலம் மூலம் 2வது நாடாக நிலவில் தரையிறங்கியது.
இதனால் உலக நாடுகள் மத்தியில் நிலவுக்கு விண்கலன் அனுப்பும் போட்டி உச்சகட்டத்தை எட்டியது பல்வேறு நாடுகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் ரஷ்யா, அமெரிக்கா வரிசையில் அடுத்ததாக சீனா கடந்த 2013ம் ஆண்டு சேன்ஞ் விண்கலத்தை நிலவில் தரையிறங்கியது.
அந்த வரிசையில் இந்தியாவும் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவின் சந்திராயன்-2 விண்கலத்தை தரையிறக்கும் முயற்சியின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிலவின் மோதியதில் அந்தத் திட்டம் தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து இஸ்ரோவின் 4 ஆண்டுகள் விடாமுயற்சியில் கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்டது.
இந்த நிலையில் பூமி நிலப்பரப்பை போன்று நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை தர இருக்கும் நாடுகள் நிலவை உரிமை கோர முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் கடந்த 1967ம் ஆண்டு இந்தியா உட்பட 109 உலக நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
அந்த ஒப்பந்தத்தின் படி நிலவு பொதுவானது எனவும், எந்த நாடு வேண்டுமானாலும் நிலவுக்கு விண்கலன் அனுப்பி சோதனை மேற்கொள்ளலாம் எனவும், ஆனால் நிலவை உரிமை கோர முடியாது எனவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பிறகு இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது.
ஆனால் இந்த சட்டமானது 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு 100 உலக நாடுகளுடன் புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் இந்த புதிய ஒப்பந்தம் அங்கீகரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற தகவலும் பரவலாக பேசப்படுகிறது.
இதற்கு முன்பு நிலவில் கால் பதித்த ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தி உரிமை கோரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிற்காலத்தில் பூமியை போன்று நிலவிலும் மனிதர்களின் குடியேற்றம் நடைபெற்றால் அப்போது என்ன செய்வது என்ற தொலைநோக்கு பார்வையுடன் ஒப்பந்தத்தில் பெரிய மாற்றம் கொண்டு வரலாம். அவ்வாறு ஒப்பந்தத்தில் பெரிய மாற்றம் கொண்டுவரப்பட்டால் நிலவில் தென் துருவத்தில் முதல் நாடாக இந்தியா தரை இறங்கி உள்ளதால் தென் துருவத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Full rundown of international law on the moon