மும்பையில் தென் கொரிய யூடியூபருக்கு பாலியல் தொல்லை - உரிய பாதுகாப்பு அளிக்க இந்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கடந்த 29 ஆம் தேதியன்று, இரவு நேரத்தில் மும்பையில் உள்ள ஒரு தெருவில் தென் கொரியாவைச் சேர்ந்த மியோச்சி என்ற யூடியூபர் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த இரண்டு இளைஞர்கள் தனது இரு சக்கர வாகனத்தில் லிப்ட் கொடுப்பதாக கூறி மியோச்சியின் கையை பிடித்து இழுத்தனர்.

அதற்கு மியோச்சி மறுப்பு தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் இரண்டு இளைஞர்களில் ஒருவர் மியோச்சிக்கு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற மியோச்சி இளைஞர்கள் பின்தொடர்ந்து சென்று இருசக்கர வாகனத்தில் ஏறுமாறு வற்புறுத்தியுள்ளார்.

இந்த வீடியோவை மியோச்சி பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, தென்கொரியா யூடியூபரின் நேரடி ஒளிபரப்பின் போது அவரிடம் சில்மிஷம் செய்த இரண்டு இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளார் அரிந்தம் பாக்சி தெரிவித்ததாவது:- "மும்பையில் துன்புறுத்தப்பட்ட தென் கொரிய பெண் யூடியூபருக்கு பாதுகாப்பு அளிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட தென் கொரிய பெண்ணுக்கு உள்ளூர் அதிகாரிகள் மூலம் பாதுகாப்பு அளிக்கப்படுவது உறுதி செய்யப்படும். 

இது தூதரக ரீதியிலான பிரச்சினையாக மாறி, கொரிய தூதரகம் எங்களை அணுகினால், இந்த விவகாரத்தில் நிச்சயம் இந்திய வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு தீர்வு காணும்" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

full security to south korean youtuber harasment Ministry of External Affairs of India order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->