மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் : 5-வது கட்ட இன்ஜின் சோதனை வெற்றி! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம், பெங்களுருவில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, பல்வேறு ஏவுகணைகளை வானில் ஏவி சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம், பணகுடி அருகே மகேந்திரகிரியில் செயல்பட்டு வரும் இஸ்ரோ மையத்தில் இருந்து விண்கலம் செலுத்துவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் எஸ்.எம்.எஸ்.டி.எம் என்ற இன்ஜின் சோதனை பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி 5-வது கட்டமாக 1700 வினாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்ட நிலையில், கவுண்டவுன் ஆரம்பிக்கப்பட்டு சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ளது. 

இந்த நிலையில், சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் ஆசீர் பாக்யராஜ் நேரில் பார்வையிட்ட நிலையில், திருவனந்தபுரம் திட்ட மைய இயக்குனர் நாராயணன், ககன்யான் திட்ட இயக்குனர் மோகன் ஆகியோர் காணொளி காட்சி மூலம் பார்வையிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gaganyaan project to send humans to space 5th stage engine test success


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->