மூதாட்டியிடம் 20 கோடி பணமோசடி - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வரும் 86 வயது மூதாட்டி ஒருவரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போலீஸ் அதிகாரி எனக்கூறி ஒருவர் தொடர்பு கொண்டு மூதாட்டியின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் அதிகளவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதாக தெரிவித்தார். 

மேலும் அந்த மோசடிக்காக மூதாட்டி மற்றும் அவரது மகள் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்போவதாகவும் மிரட்டினார். தொடர்ந்து மூதாட்டியை டிஜிட்டல் கைது செய்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டியிடம் மேலும் சிலர் அதிகாரிகள் என்றுக் கூறி பேசினர்.

நாளடைவில் அந்த கும்பல் வழக்கில் இருந்து தப்பிக்க வைப்பதாக கூறி மூதாட்டியிடம் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கடந்த 5-ந்தேதி வரை ரூ.20 கோடி வரை பணம் பறித்தனர். ஆனால், அதற்கான வேலைகள் நடப்பது போல் தெரியவில்லை. இதனால், தான் ஏமாற்றப்படுவதை அறிந்த மூதாட்டி இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் படி போலீசார் இந்த மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், மோசடியில் மலாடு மேற்கு பகுதியை சேர்ந்த ஷயான் ஜமீல் சேக், மிரா ரோட்டை சேர்ந்த ரஜிக் அசாம் பட் உள்ளிட்டவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், மோசடியில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

gang 20 crores money fraud to old lady in maharastra mumbai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->