பழம்பெரும் கலைஞர், ஜெமினி சங்கரன்" மறைவு.! இந்திய சர்க்கஸின் முன்னோடியின் இழப்பு.! - Seithipunal
Seithipunal


ஜெமினி சர்க்கஸின் நிறுவனரும் இந்திய சர்க்கஸ் கலையின் முன்னோடியுமான ஜெமினி சங்கரன்  நேற்றிரவு உடல் நலக்குறைவால் காலமானார். அவரது இறுதிச்சடங்கு வருகின்ற செவ்வாய்க்கிழமை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

இந்தியாவில் சர்க்கஸ் கலை வளர்வதற்கு மிகவும் முக்கிய காரணமாக இருந்தவர் ஜெமினி சங்கரன். இவர் ஜெமினி சர்க்கஸ் என்ற பெயரில் வெளிநாட்டு சர்க்கஸ் கலைஞர்களின் திறமையை உள்ளடக்கிய இந்தியாவின் சர்க்கஸ் கலையை நவீனப்படுத்தியவர்.

1924 ஆம் ஆண்டு பிறந்த சங்கரன்  ஜிம்னாஸ்டிக், களரி மற்றும் தற்காப்பு கலைகளை பயிற்றுவித்து வந்த கீலெரி குஞ்சிக் கண்ணனிடம்  மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றார். 1951 ஆம் ஆண்டு விஜயா சர்க்கஸ் என்ற சர்க்கஸ் கம்பெனியை வாங்கி அதற்கு ஜெமினி சர்க்கஸ் என பெயர் வைத்தார்.

சர்க்கஸ் கலையில் சங்கரன் பல புதிய முறைகளை பயன்படுத்தி அதனை நவீனப்படுத்தினார். இதனை பாராட்டி இந்திய அரசு அவருக்கு  வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கௌரவித்தது. இன்று கேரள முதல்வர் பினராய் விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில்  வெளிநாட்டு கலைஞர்களின் திறமையை உள்ளடக்கிய இந்தியாவின் சர்க்கஸ் கலையை நவீனமயப்படுத்துவதில் சங்கரன் முக்கிய பங்கு வகித்தார்  என குறிப்பிட்டு இருக்கிறார். அவரது இழப்பு நாட்டிற்கும் சர்க்கஸ் கலைக்கும் ஒரு மிகப்பெரிய இழப்பு எனவும் அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gemini Circus founder and pioneer of Indian circus art Gemini Sankaran passes away


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->