சிறைக் கதவைத் தட்டிய சிறுமி - நடந்தது என்ன?
girl cry in front of jail in andira
ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூல் புறநகர் பழைய மாநகர பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு ஏழு வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில், இந்த இளம் பெண்ணை போலீசார் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுக்குறித்து தகவல் தெரியாத அந்த சிறுமி அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது, அவர்கள் உன்னுடைய தாய் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த சிறுமி நேற்று முன்தினம் சிறைக்குச் சென்றபோது, அங்கு ஜெயிலின் கதவு மூடப்பட்டு இருந்தது.
நீண்ட நேரமாகியும் சிறை கதவு திறக்காததால் சிறுமி கதறி அழுதபடி கதவை தட்டிக் கொண்டே இருந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது தொடர்பாக சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சிறை அதிகாரிகள் விரைந்து வந்து கதவைத் திறந்து சிறுமியை சிறைக்குள் அழைத்துச் சென்று தாயைக் காட்டியுள்ளனர்.
அப்போது, சிறுமி தனது தாயிடம் போலீசார் உன்னை ஏன் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்? என்று கேட்ட சம்பவம் அங்குள்ளவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிறிது நேரத்திற்கு பிறகு போலீசார் அந்த சிறுமியை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். தாயைக் காண சிறையில் கதவை தட்டியபடி சிறுமி கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
girl cry in front of jail in andira