சிறுமி படுகொலை: போலீசார் கூண்டோடு மாற்றம்..! அதிரடி உத்தரவிட்ட முதல்வர்.!  - Seithipunal
Seithipunal


புதுச்சேரி, முத்தியால்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை கூண்டோடு மாற்ற முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். 

சிறுமி கொலை வழக்கில் அலட்சியம் காட்டியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் முதலமைச்சர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். 

புதுச்சேரி, சோலை நகரில் கடந்த சனிக்கிழமை 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு தரப்பினரும் புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வந்த நிலையில் புதுச்சேரி கொலை வழக்கில் அலட்சியமாக இருந்த போலீசார் கூண்டோடு மாற்றம் செய்ய முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். 

சிறுமி கொலை வழக்கில் கருணாஸ், விவேகானந்தன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலாளியில் உள்ள 5 பேரிடம் ஐ.பி.எஸ் அதிகாரி கலைவாணன் தலைமையினான சிறப்பு குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் சிறுமி உடல் அடக்கம் செய்யப்பட்டு, கைதானவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு இன்று மாலை போலீசார் இடமாற்ற உத்தரவு வெளியாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Girl murder case Police changed CM order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->