சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த கொடூரனின் அதிரவைக்கும் பின்னணி!
girl sexually assaulted killed person already arrested
கேரளத்தில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான நபா், போக்ஸோ வழக்கின்கீழ் 5 ஆண்டுகளுக்கு முன் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவா் என போலீசார் நேற்று தெரிவித்தனா்.
எா்ணாகுளம் மாவட்டத்தின் ஆலுவாவைச் சோ்ந்த சிறுமி (வயது 5) பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டாள்.
சிறுமி தன் குடும்பத்துடன் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள புலம் பெயர்ந்து வந்த பிகாா் மாநில தொழிலாளி ஆஷ்ஃபாக் ஆலம் என்பவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் குற்றமிழைத்ததை ஒப்புக் கொண்டாா்.
இந்நிலையில் மாநில போலீசார், கைதுசெய்யப்பட்ட ஆலமின் குற்றப் பின்புலத்தைத் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனா். அப்போது, ஆலம் ஏற்கெனவே போக்ஸோ வழக்கின்கீழ் கைது செய்யப்பட்டு பின்னர் அவர் ஜாமீனில் வெளியாகியிருப்பது தெரியவந்தது.
இது குறித்து ஆலுவா ஊரகப் பிரிவு காவல் துறைக் கண்காணிப்பாளா் தெரிவிக்கையில், ''காஜிபூரைச் சோ்ந்த 10 வயது சிறுமியை ஆலம், கடந்த 2018-இல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயன்றதால் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.
மற்றொரு குற்றச்செயலுக்காக ஒரு மாதம் டெல்லி சிறையில் இருந்த அவருக்கு, ஜாமீன் வழங்கப்பட்டது. புலம்பெயா் தொழிலாளியாக கேரளத்துக்கு வருவதற்கு முன்பு, அவா் வேறு ஏதனும் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றாா்.
இதனிடையே, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆஷ்ஃபாக் ஆலமை போலீஸ் காவலில் 10 நாள்களுக்கு வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
English Summary
girl sexually assaulted killed person already arrested