ஸ்மார்ட்போனுக்காக சிறுமி செய்த செயல்.. 'ரத்தமா?' அதிர்ந்து போன ஊழியர்கள்.! - Seithipunal
Seithipunal


தனக்கு ஸ்மார்ட் போன் வாங்கிக் கொள்வதற்காக ஒரு நான்காம் வகுப்பு சிறுமி ரத்தத்தை விற்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள தாபான் பகுதியில் நான்காம் வகுப்பு சிறுமி ஒருவர் தன்னுடைய கிராமத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மாவட்ட மருத்துவமனை ஒன்றுக்கு சென்று அங்கிருக்கும் ரத்த வங்கியை அடைந்தார். 

அங்கிருந்த ஊழியர்களிடம் தான் ரத்த தானம் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனே சைல்ட் லைனுக்கு இது பற்றி தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து ஏன் ரத்தம் விற்க விரும்புகிறீர் என்று அவர்கள் நைசாக பேசிய போது தனக்கு படிப்பு செலவுக்கு பணம் தேவைப்படுகிறது எனவே தான் ரத்தம் கொடுக்க வந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள் சிறுவர்கள் ரத்தம் கொடுக்க முடியாது என்று கூறினார்கள். உடனே, அந்த சிறுமி தனக்கு ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும். எனவே, தான் ரத்தத்தை விற்கலாம் என வந்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

இதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் இது குறித்து விசாரித்ததில் அந்த சிறுமி ஐந்தாயிரம் மதிப்புள்ள செல்போனை ஞாயிற்று கிழமை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். 

இதற்கு கொடுக்க பணம் வேண்டும் என்று அவர் தனது ரத்தத்தை விற்க முயற்சித்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த சிறுமி மனநல ஆலோசனை கொடுக்கப்பட்டு அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl trying to donate blood for smart phone make shock


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->