பிளாஸ்டிக் கொடுத்தால் தங்க & வெள்ளி நாணயம் வழங்கப்படும்.. கிராம தலைவர் அறிவிப்பு.!
Give plastic get gold in Jammu Kashmir
பிளாஸ்டிக் குப்பைகளை கொடுத்தால் தங்க காசு வழங்கப்படும் என ஜம்மு காஷ்மீரில் உள்ள கிராம தலைவர் ஒருவர் அறிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் கழிவுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்காக துணிப்பை போன்ற மாற்று பைகளை பயன்படுத்த வலியுறுத்தியும் வருகிறது.
அந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் 2000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொடுப்பவர்களுக்கு தங்க நாணயம் வழங்கப்படும் என ஜம்மு காஷ்மீரில் உள்ள கிராம தலைவர் ஒருவர் அறிவித்துள்ளார்.
மேலும், பிளாஸ்டிக் குப்பைகளை பொதுவெளியில் கொட்டுவதால் மண்வளம் சீர்கேட்டு போகிறது. இதனை தடுப்பதற்காகவே பிளாஸ்டிக் கழிவுகளுக்கு ஏற்ப தங்க காசுகளும், வெள்ளி காசுகளும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தற்போது அவரது முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
English Summary
Give plastic get gold in Jammu Kashmir