குழிதோண்டிய ஊழியர்கள்! குழியில் கிடைத்த தங்க புதையல்! - Seithipunal
Seithipunal


கேரளாவில் மழைநீர் வடிக்கால் அமைக்க குழி தோண்டியபோது தோட்டத்தில் தங்க புதையல் ஊழியர்கள் கையில் கிடைத்துள்ள சம்பவம் நடைபெற்று உள்ளது.

கேரளா மாநிலம் கண்ணூர் அருகே செங்காலா பகுதியில் தனியார் ரப்பர் தோட்டம் ஒன்று உள்ளது. இந்த ரப்பர் தோட்டத்தில் ஊழியர்கள் மழை நீர் வடிவில் அமைக்க குழி தோண்டி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது தோட்டத்தின் ஒரு பகுதியில் ஊழியர்கள் 10 அடி ஆழத்திற்கு ஊழியர்கள் குழி தோண்டி உள்ளனர். அப்போது மண்சுழ்ந்த நிலையில் ஒரு குடம் புதைந்திருப்பதை ஊழியர்கள் பார்த்துள்ளனர்.

பின்னர் அது வெடிகுண்டாக இருக்கலாம் என்று பயந்த ஊழியர்கள். அந்த குடத்திற்குள் என்ன இருக்கிறது என்று திறந்து பார்க்காமல் இதுகுறித்து கண்ணூர் மாநகர போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின் பெயரில் அங்கு விரைந்த போலீசார். குடத்தை பறிமுதல் செய்து வெடிகுண்டு சோதனை இயந்திரம் மூலம் சோதனை செய்தனர். அந்தக் குடத்தில் வெடிகுண்டு இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போலீசார் குடத்தைத் திறந்து பார்த்தபோது அதில் தங்க நகைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

குடத்திற்குள்  13 தங்கப்பதக்கங்கள், 4 காசிமணி மாலை, கம்பல் 17 முத்துமணிகள், வெள்ளி நாணயங்கள் ஆகியவை இருந்தது. அதனை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு சென்றனர். அதன் பின்னர் போலீசார் அந்த பொருட்களை மீட்டு வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மண்ணுக்குள் கிடைத்த தங்க நகைகள் மற்றும் புதையல் கிடைத்த இடத்தை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gold treasure in a garden when a pit was dug for rainwater drainage in Kerala


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->