சாலையில் தறிகெட்டு ஓடிய அரசு பேருந்து - பயணிகளின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


ஹரியானா மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலா மாவட்டத்தில் இன்று காலையில் அரசுப் பேருந்து ஒன்று பயணிகளுடன் நால்டா கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்று சாலையில் கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பிஜ்னோர் மருத்துவமனை மற்றும் செக்டார் சிவில் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

இதில் ஒரு பெண் பயணியின் உடல்நிலை மோசமானதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக சண்டிகர் பி.ஜி.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையே போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து காவல்துறை தரப்பில், இந்த விபத்து பேருந்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பயணிகளை ஏற்றிச் சென்றது, சாலையின் மோசமான நிலை உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்டிருக்கலாம் என்றுத் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government bus accident in hariyana


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->