'தூக்கிலிட வேண்டும்' கவுதம் கம்பீர் ஆவேசம்.!
Gowtham Gambhir about Delhi school Girl Acid attack
நேற்று காலை பள்ளிக்கு சென்ற மாணவி மீது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ஆசிரியை வீசி இருக்கின்றனர் இந்த ஆசிட் வீச்சு காரணமாக சிறுமியின் கண்கள், முகம் உள்ளிட்டவற்றில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த மாணவியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சப்தர்ஜிங் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். உயிர்க்காபத்தான நிலையில் அந்த மாணவி சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் விசாரணையில் முதல் கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
அந்த சிறுமியின் மீது ஆசிட் வீசுவது பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த வீடியோவை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணுகின்ற பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் முக்கிய குற்றவாளிகளாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நைட்ரிக் ஆசிட்டை ஆன்லைன் மூலமாக வாங்கி அவர்கள் வீசி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அவர், "வெறும் வார்த்தைகளால் பெற்று நீதியை வழங்கி விட முடியாது. இது போன்ற மிருகங்களுக்கு வலி குறித்த பயத்தை கொடுக்க வேண்டும். இவர்களை பொதுவெளியில் வைத்து பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Gowtham Gambhir about Delhi school Girl Acid attack