மனைவியுடன் சேர வேண்டுமென்றால் ரூ.10 லட்சம் பணம் வேண்டும் - புதுமாப்பிள்ளை அதிரடி.! - Seithipunal
Seithipunal


மனைவியுடன் சேர வேண்டுமென்றால் ரூ.10 லட்சம் பணம் வேண்டும் - புதுமாப்பிள்ளை அதிரடி.!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிலிபித் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி நடைபெற்ற திருமணத்தில் மணமகன் வீட்டார் கேட்ட வரதட்சணை நடைமுறைகள் அனைத்தையும் தவறாமல் பெண்வீட்டார் முறைப்படி செய்துள்ளனர். சீர்வரிசை மட்டுமில்லாமல், ரூ.20 லட்சம் பணத்தையும் அளித்துள்ளனர். 

இந்த நிலையில், மணமகன் ரொக்கமாக ரூ.10 லட்சம் கூடுதல் வரதட்சணை தந்தால் மட்டுமே தேனிலவுக்கு செல்வேன் என்று புதிய நிபந்தனை வைத்துள்ளார். இதைக்கேட்ட பெண் வீட்டார் அவசரமாய் ரூ.5 லட்சம் பணத்தை புரட்டி மாப்பிள்ளையிடம் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து தேனிலவுக்கு சென்ற புதுமாப்பிள்ளை கேட்ட தொகையில் பாதி மட்டுமே தந்ததால், மனைவியை நெருங்காது தள்ளியே இருந்துள்ளார். மேலும், அங்கிருந்தபடி, முழுதொகையையும் கொடுத்தால் மட்டுமே மனைவியுடன் சேர்வேன் என்று நிபந்தனை விதித்துள்ளார். இதனால், வெறுப்படைந்த புது மனைவி சொந்த ஊருக்குத் திரும்பிய உடன் குடும்ப பஞ்சாயத்தை கூட்டியுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசிலும் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தேனிலவுக்குச் சென்ற இடத்தில், ஆசை வார்த்தை கூறி தன்னை ஏடாகூடமாய் எடுத்த புகைப்படங்களை காட்டி, ’குடும்ப பெரியவர்களிடமோ, போலீஸிடமோ புகார் கொடுக்கக்கூடாது’ என்று தன்னை கணவர் மிரட்டியதாக தெரிவித்துள்ளார். இந்தப் புகாரை பதிவு செய்த போலீஸார், இருவீட்டாரிடமும் விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

groom ask 10 lakhs money to bribe family in up


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->