ம.பியில் சோகம் : திருமண விழாவன்று விஷம் குடித்த மணமக்கள் - மணமகன் உயிரிழப்பு.!
groom died and bride serious in madhya pradesh for sucide
ம.பியில் சோகம் : திருமண விழாவன்று விஷம் குடித்த மணமக்கள் - மணமகன் உயிரிழப்பு.!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் இளம் ஜோடிகள் திருமணத்திற்காக காத்திருந்தனர். இந்த நிலையில், மணமகள் கடந்த சில நாட்களாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மணமகனை வற்புறுத்தி வந்துள்ளார்.
அதற்கு மருமகன் தன்னுடைய தொழில் காரணமாக திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் தருமாறு கேட்டுள்ளார். ஆனால். அந்த பெண் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் திருமண செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது.
இதைத்தொடர்ந்து இருவருக்கும் கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஆர்ய சமாஜ் கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது. அப்போது மணமகன் விரக்தியில் விஷம் குடித்துள்ளார். இந்த தகவலை மணமகளிடமும் தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட மணமகளும் உடனே விஷம் குடித்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த உறவினர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மணமகன் உயிரிழந்து விட்டதாகவும், மணமகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதக்கவும் தெரிவித்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணத்தன்று மணமக்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
groom died and bride serious in madhya pradesh for sucide