மதுபோதையில் மாறிப்போன மணமகள் - மணமகனின் செயலால் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் நடந்த திருமணத்தில் மதுபோதையில் இருந்த மணமகன் மணமகளின் தோழிக்கு மாலை சூடுய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பரேலி அருகே நவ்க்வா பகவந்த்பூர் பகுதியில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. மணமேடையில் மணமகள் அமர்ந்திருக்க, மணமகன் தள்ளாடியபடி மேடைக்கு வந்தார்.

அப்போது குடிபோதையில் இருந்த மணமகன் மணப்பெண்ணுக்கு மாலை அணிவிப்பதற்கு பதிலாக, பக்கத்தில் இருந்த மணமகளின் தோழிக்கு மாலையை அணிவித்தார். இந்தச் சம்பவத்தால் திருமணத்துக்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மணமகனின் செயலால் கோபமடைந்த மணப்பெண், அவரை திருமணம் செய்யமாட்டேன் என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.

இதன் காரணமாக இரு குடும்பங்களுக்கும் இடையே சண்டை தொடங்கியது. இரு தரப்பினரும் ஒருவரையொருவரை நோக்கி நாற்காலிகளை வீசி எறிந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையைக் கட்டுப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

groom drunk at marriage function in uttar pradesh


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->