07 விநாடிகளில் இதய நோயை கண்டறியும் சர்காடியன் ஏ.ஐ., செயலி; 14 வயது இந்திய வம்சாவளி சிறுவன் சாதனை..!
Circadian AI app detects heart disease in 7 seconds Indian origin boy sets record
7 விநாடிகளில் இதய நோயை கண்டறியும் ஏ.ஐ., செயலியை கண்டுபிடித்த இந்திய வம்சாவளி சிறுவனுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஒபாமா, ஜோ பைடன் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள தலாஸ் நகரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுவன் சித்தார்த் நந்த்யாலா. இவர் ஆந்திராவின் ஐதராபாத் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் உலகளவில் ஏ.ஐ., சான்றிதழ் பெற்ற இளம் மென்பொறியாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த சிறுவன் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ துறைக்கு உதவும் விதமான புதிய படைப்பை உருவாக்கி உலகளவில் கவனத்தை பெற்றுள்ளார். அதாவது, 07 விநாடிகளில் இதய துடிப்பின் சத்தத்தை வைத்து இதய நோயை கண்டுபிடிக்கும் சர்காடியன் ஏ.ஐ., எனும் செயலியை உருவாக்கியுள்ளார்.
அதாவது, உலகளவில் நிகழும் இறப்புகளில் 31 சதவீதம் உயிரிழப்புகள் இருதய நோய் தொடர்பானது ன்பதால், தன்னை இந்த புதிய கண்டுபிடிப்பை உருவாக்க தூண்டியதாக 14 வயது சிறுவன் சித்தார்த் நந்த்யாலா தெரிவித்துள்ளார்.
இந்த சர்காடியன் ஏ.ஐ., மூலம் இந்தியா, அமெரிக்கா என இருநாடுகளிலும் சேர்த்து 2,000 நோயாளிகளிடம் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சித்தார்த் நந்த்யாலாவை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் சந்தித்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Circadian AI app detects heart disease in 7 seconds Indian origin boy sets record