குஜராத், இமாச்சல் தேர்தல் - இருமாநிலங்களை கட்டி ஆளப்போவது யார்? பரபரப்பாக தொடங்கும் வாக்கு எண்ணிக்கை.!   - Seithipunal
Seithipunal


182 உறுப்பினர் சட்டசபைக் கொண்ட குஜராத் மாநிலத்தில்  இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், இன்று அதற்கான வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. இதற்காக 37 வாக்கு எண்ணும் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன் படி, இன்று மதியத்திற்குள் குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளுமா? இல்லை இத்தனை வருடம் ஆட்சியை இழந்து தவித்த  காங்கிரஸ் ஆட்சியை பிடிக்குமா? இல்லை மாநிலத்தில் புதிய வரவாக மாறியிருக்கும் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்குமா? என்பது தெரிந்துவிடும்.

இதையடுத்து, மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்கு 92 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும் என்ற நிலையில், இது மோடியின் சொந்த மாநிலம் என்பதால், பா.ஜனதா 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

இதற்கு முன்னதாக, கடந்த மாதம் 12-ந்தேதி இமாசல பிரதேச மாநிலத்தின் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று எண்ணப்படுகின்றன. இதற்காக மாநிலத்தின் 59 இடங்களில் வாக்கு எண்ணிக்கை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்து கொள்வதற்காக பாஜகவும், ஆட்சியை கைப்பற்றுவதற்காக காங்கிரசும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆனால், இமாச்சலில் ஆட்சியமைப்பதற்கு 35 உறுப்பினர் ஆதரவு தேவைப்படும் நிலையில், இதில் யாருக்கு மெஜாரிட்டி இருக்கிறது என்று கருத்து கணிப்பில் கூட சொல்ல முடியவில்லை.

இரு தரப்பினரும் தீவிர செயலில் ஈடுபட்டுள்ளதால் அதற்கான ஒரு முடிவு இன்று தெரிய வரும். இரு மாநிலங்களிலும் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை அரங்குகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், வாக்கு எண்ணிக்கை அரங்குகளில்  மாநில போலீசாருடன், துணை ராணுவத்தினரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

gujarat and himachal election vote counting today start


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->