குஜராத்தில் சொகுசுப் பேருந்து விபத்து! 5 பேர் பலி, 17 பேர் படுகாயம்!
Gujarat Bus Accident 2025
குஜராத்தில் சொகுசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
குஜராத்தின் டாங் மாவட்டத்தில், சபுதாரா மலைப்பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர், 17 பேர் காயமடைந்தனர்.
மகாராஷ்டிராவின் திரிம்பகேஷ்வரில் இருந்து குஜராத்தின் துவாரகாவுக்குச் சென்று கொண்டிருந்த 40-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது.
விபத்து நடந்த நேரத்தில் பேருந்து ஓட்டுநர் தூங்கியிருக்கலாம் அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Gujarat Bus Accident 2025