பிரபாஸின் 'ராஜா சாப்' படத்தின் அப்டேட் ஹின்ட் கொடுத்த இயக்குனர்...!
director gave an update hint for Prabhas Raja Saab
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் 'பிரபாஸ்'. இவர், இயக்குனர் மாருதி இயக்கத்தில் ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகும் 'தி ராஜா சாப்' படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தினை பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் ஜிஎஸ்கே மீடியா ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் இசையமைப்பாளராக தமன் இசையமைக்கிறார்.
மேலும், இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.இப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் மற்ற அப்டேட்களை எதிர்பார்த்து பிரபாஸ் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் மாருதி இப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை பகிர்ந்துள்ளார்.அவ்வகையில் தனது எக்ஸ் பதிவில், 'அதிக எச்சரிக்கை... மே மாத மத்தியில் இருந்து வெப்ப அலைகள் இன்னும் உயரும்" என்று பகிர்ந்துள்ளார்.
இதன்மூலம் அடுத்த மாதத்தில் 'தி ராஜா சாப்' படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
director gave an update hint for Prabhas Raja Saab