மாஹே வில் இருந்து பந்தக்கல்லுக்கு இரண்டு புதிய பேருந்துகள்.. MLA ரமேஷ் பரம்பத் தொடங்கிவைத்தார்!
Two new buses from Mahe to Pantakkal MLA Ramesh Parambath Launched
மாஹே வில் இருந்து சொக்கிலி வழியாக பந்தக்கல் சென்று சாலக்கரை வழியாக மாஹே வந்தடையும் இரண்டு பேருந்துகளை பொதுமக்களின் வசதிக்காக மாஹே சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பரம்பத் தொடங்கிவைத்தார்.
புதுச்சேரி மாநிலம் மாஹே பிரிவில் ஏற்கனவே நான்கு நகர பேருந்துகள் இயக்கப்பட்டது அதில் இரண்டு பேருந்துகள் பழுதாகி சில மாதங்களாக இயக்கப்படாமல் இருந்ததுஇரண்டு பேருந்துகள் இயக்கப்படாததால் மாஹே பொதுமக்கள் மேதகு துணை நிலை ஆளுநர் மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் பேருந்து வசதிசெய்து தர கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணைப்படி இரண்டு சிறிய பேருந்துகளை (Mini bus) இயக்குவதற்கு புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அவர்கள் ஆவண செய்தார்
இதன் காரணமாக இரண்டு பேருந்துகளின் துவக்க விழா மாஹே சட்டமன்ற உறுப்பினர் திரு ரமேஷ் பரம்பத் அவர்கள் மற்றும் திரு சிவக்குமார் REO, MAHE, அவர்கள் தலைமையில் இரண்டு பேருந்துகளின் துவக்க விழா நடைபெற்றது.
இந்தப் பேருந்துகளின் வழித்தடம்.
மாஹே to பந்தக்கல்.
ஒரு பேருந்து மாஹே வில் இருந்து புறப்பட்டு சாலக் கரை வழியாக பந்தக்கல் சென்று வரும்போது சொக்கிலி வழியாக மாஹே வந்தடையும்
அடுத்த பேருந்து மாஹே வில் இருந்து சொக்கிலி வழியாக பந்தக்கல் சென்று சாலக்கரை வழியாக மாஹே வந்தடையும். இந்த இரண்டு பேருந்துகள் 24.04.2025 முதல் தடத்தில் பொதுமக்களின் வசதிக்காக இயக்கப்படுகிறது.
மேலும் புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் நடத்துனர் பற்றாக்குறை காரணமாக மாஹே கூட்டுறவு சங்கம் மூலம் ஏழு ஓட்டுநர்கள் இரண்டு நடத்துனர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கூட்டுறவு சங்கம் ஓட்டுனர் நடத்துனர்களுக்கான ஊதியம் மற்றும் சேவை கட்டணத்தை சேர்த்து சாலை போக்குவரத்து கழகத்தில் பெற்று ஊதியத்தை மட்டும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு வழங்குவார்கள்
English Summary
Two new buses from Mahe to Pantakkal MLA Ramesh Parambath Launched