பாஜகவின் இரட்டை என்ஜின் வஞ்சகத்தில் இருந்து உங்களை பாதுகாப்போம் - ராஜிவ் காந்தி ட்விட்.
gujarat election campaign ragul ganthi twitter post
குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் 1 மற்றும் 5-ந்தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிராஸும் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போட்டி களத்தில் இந்த இரண்டு கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சியும் இணைந்துள்ளதால், குஜராத் தேர்தல் களத்தில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்தல் களம் இன்னும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
இதையடுத்து, குஜராத் மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதற்காக காங்கிரஸ் கட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, மக்களின் ஆதரவை பெறுவதற்காக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறது.
இந்த வாக்குறுதிகளில் மிக முக்கியமாக வேலைவாய்ப்பு, கடன் தள்ளுபடி மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு உள்ளிட்ட திட்டங்களை அறிவித்துள்ளது. இதையடுத்து, இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'ரூ.500-க்கு கியாஸ் சிலிண்டர், விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி, இளைஞர்களுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்பு வழங்கப்படும். குஜராத் மாநில மக்களுக்கு நாங்கள் அளித்துள்ள இந்த வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்' என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜகவின் இரட்டை என்ஜின் வஞ்சகத்தில் இருந்து உங்களை பாதுகாப்போம் என்றும், மாநிலத்தில் மாற்றத்தின் திருவிழாவை கொண்டாடுவோம் என்றும் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் இந்த பதிவு குஜராத் மாநிலத்தில் கட்சித்தொண்டர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
gujarat election campaign ragul ganthi twitter post